மன்னர்கள் காலத்திலேயே மக்களாட்சியை கொண்டுவந்த மாமன்னர் - டிடிவி புகழாரம்

by Staff / 25-10-2023 12:02:02pm
மன்னர்கள் காலத்திலேயே மக்களாட்சியை கொண்டுவந்த மாமன்னர் - டிடிவி புகழாரம்

மன்னர்கள் காலத்திலேயே மக்களாட்சி முறையை நடைமுறைப் படுத்தியவர் மாமன்னர் ராஜராஜசோழன் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார். சோழ சாம்ராஜ்யத்தின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த பொன்னியின் செல்வன் ராஜராஜசோழனின் 1038-வது சதயவிழா இன்று கொண்டாடப்படும் நிலையில், ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் உலகப் புகழ் பெற்றதாக திகழும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியதோடு, சிறந்த நிர்வாகம், நீர் மேலாண்மை, விவசாயம், கட்டடக்கலை, பொதுமக்களின் பொருளாதார வளர்ச்சி என அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டியாக திகழ்ந்த மாமன்னன் ராஜராஜ சோழனின் வீரத்தையும், ஆளுமையையும் எந்நாளும் போற்றி வணங்குவோம் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories