திமுகவுக்கு உண்மை கசக்கத்தான் செய்யும் - வானதி சீனிவாசன்

by Staff / 25-10-2023 11:59:02am
திமுகவுக்கு உண்மை கசக்கத்தான் செய்யும் - வானதி சீனிவாசன்

ராபர்ட் கால்டுவெல் எழுதிய ஆரிய - திராவிட இனவாத கட்டுக்கதை தான் திமுகவின் அடிப்படை கொள்கை என்று கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். மதம் மாற்றுவதற்காக தமிழ்நாடு அனுப்பி வைக்கப்பட்ட கிறிஸ்தவ பாதிரியார் ராபர்ட் கால்டுவெல்தான் திமுகவின் கொள்கை ஆசான். திராவிட நிலப்பரப்பை, திராவிட இனமாக முன்வைத்தவர் ராபர்ட் கால்டுவெல்தான். அவர் எழுதிய ஆரிய - திராவிட இனவாத கட்டுக்கதையில் பிறந்ததுதான் நீதிக்கட்சியும், திராவிடர் கழகமும், அதிலிருந்து உருவானதுதான் திமுக. அதைதான் ஆளுநர் ஆர்.என்.ரவி சுட்டிக்காட்டியிருக்கிறார். தங்கள் கொள்கை ஆசானை விமர்சித்தால் திமுகவுக்கு கோபம் வருவது இயற்கையானதுதான் என விமர்சித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo