திமுக அது கட்சியல்ல. கார்ப்பரேட் கம்பெனி மக்கள் திமுகவுக்கு முட்டை வழங்குவார்கள் - இபிஎஸ்

by Staff / 25-10-2023 12:14:33pm
திமுக அது கட்சியல்ல. கார்ப்பரேட் கம்பெனி மக்கள் திமுகவுக்கு முட்டை வழங்குவார்கள் - இபிஎஸ்

நீட் தேர்வை அவர்களே கொண்டு வந்துவிட்டு இப்போது எதிர்ப்பது போல நாடகமாடுகிறார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வு ரத்து செய்ய ரகசியம் தெரியும் என கூறிய அமைச்சர் உதயநிதி, இப்போது கையெழுத்து இயக்கம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் திமுகவுக்கு முட்டை வழங்குவார்கள். திமுக அது கட்சியல்ல. கார்ப்பரேட் கம்பெனி. கொள்ளையடிப்பதற்கும், கொள்ளையடித்த பணத்தை காப்பாற்றிக் கொள்வதற்குமே திமுக கூட்டணி அமைக்கிறது. ஆட்சி அதிகாரத்திற்காக யாரிடம் வேண்டுமானாலும் கூட்டணி வைப்பார்கள். இவ்வாறு அவர் விமர்சித்தார்.

 

Tags :

Share via

More stories