ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக தீர்மானம்
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் 18ம் தேதி நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நாளை அவசர ஆலோசனை நடைபெற உள்ளது. அதன்படி, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நாளை இரவு 8 மணிக்கு அவசர ஆலோசனை நடத்த உள்ளனர். இந்தியா கூட்டணியைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை எம்.பி.,க்களுக்கு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.
Tags :