அதிமுக நிர்வாகி கொலை - இபிஎஸ் கண்டனம்

by Staff / 30-06-2024 02:01:12pm
அதிமுக நிர்வாகி கொலை - இபிஎஸ் கண்டனம்

கடலூரில் அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இபிஎஸ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "கடலூரில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் புஷ்பநாதன் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டியுள்ளேன். திமுக ஆட்சியில் மக்கள், காவல்துறையினர், அரசியல் கட்சியினர் என யாருக்குமே பாதுகாப்பு இல்லை. அதிமுக நிர்வாகி புஷ்பநாதனை கொலை செய்தோரை துரிதமாக கைது செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via

More stories