நெல்லை ஆட்சியரை கடுமையாக சாடி விளாசிய புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி

by Editor / 04-07-2024 11:12:46pm
நெல்லை ஆட்சியரை கடுமையாக சாடி விளாசிய புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை உயிரோடு புதைக்கும் நிகழ்வுகளை நெல்லை மாவட்ட ஆட்சியர் கையால்வதாகவும், அவர் விலைபோயிவிட்டதாகவும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி சாடல்

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு பெற்று வெளியேறக்கூடிய சூழ்நிலையில் அவர்ககளுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறுகையில்,

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை பொறுத்தவரை அவர்கள் முகவரியே மாஞ்சோலை என்ற நிலையில் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதாகவும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அப்பட்டமான பொய்யை கூறுகிறார். மேலும் தொழிலாளர்களின் முகவரி மாஞ்சோலையாக இருக்ககூடிய நிலையில் குடும்ப அட்டை பெற
சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறுவது யாருக்கோ விலை போனது போல தெரிகிறது என பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்தார்.

மேலும் இந்த நடவடிக்கை காரணமாக தேயிலை தோட்ட தொழிலாளர்களை நெல்லை மாவட்ட ஆட்சியர் உயிரோடு புதைப்பதற்கு சமம் எனவும் கூறினார்.
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கேடு செய்து வருகிறார். தொழிலாளர்களுக்கு எதிராக பி பி டி சி நிர்வாகம் இருந்து வருவதாக எதிர்பார்த்த நிலையில் தற்போது இதற்கு உடந்தையாகவும், நிர்வாகத்திற்கு பின்னால் ஒளிந்து கொண்டிருந்தது மாவட்ட ஆட்சியர் இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அந்த வகையில் முதல் பூனை குட்டி வெளியே வந்து விட்டதாகவும், பழமொழி ஒன்றை சுட்டிகாட்டி ஆட்சியரை கடுமையாக சாடினார்.

மேலும் இந்த நிகழ்வை கண்டித்து வருகின்ற 6ம் தேதி நெல்லையில்  புதிய தமிழகம் கட்சியின் தலைமையில் அரசியல் சார்பற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும், இதில் பொதுமக்கள் இளைஞர்கள் வியாபாரிகள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்

 

Tags : நெல்லை ஆட்சியரை கடுமையாக சாடி விளாசிய புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி

Share via