திமுக-காங்கிரஸ் பற்றி பொய் செய்தி பரப்புகிறார்கள்....

by Staff / 28-02-2024 05:19:52pm
திமுக-காங்கிரஸ் பற்றி பொய் செய்தி பரப்புகிறார்கள்....

திமுக-காங்கிரஸ் பற்றி பொய் செய்தி பரப்புகிறார்கள் என செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ராகுலும், ஸ்டாலினும் உடன் பிறவா சகோதரர்களாக இருப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைமை ஆலோசனை கூட்டம் நடத்தியதால், கலைஞர் நினைவக திறப்பு விழாவில் நான் கலந்துகொள்ள முடியவில்லை. உடனே கூட்டணி பிளவு என செய்தி பரப்புகிறார்கள். எங்கள் கட்சியை சேர்ந்த முன்னோடிகள் கலந்துகொண்டார்கள். ஆதாரமற்ற செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். திமுக-காங்கிரஸ் வெற்றி கூட்டணி தொடரும் என்றார்.
 

 

Tags :

Share via

More stories

Logo