நீட் தேர்வு இருக்க கூடாது - அமைச்சர் பொன்முடி

by Staff / 20-08-2023 12:21:03pm
நீட் தேர்வு இருக்க கூடாது - அமைச்சர் பொன்முடி

நீட் தேர்வுக்கு எதிராக திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவ அணி சார்பில், மதுரை தவிர்த்து தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. விழுப்புரம், நகராட்சி திடலில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். இந்நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “நீட் தேர்வு கூடாது என்பது எங்கள் கொள்கை,எடப்பாடி பழனிசாமி காலத்தில் தான்நீட் தேர்வு நுழைந்தது. அடுத்த கல்வி ஆண்டில் இருந்து நீட் தேர்வு இருக்க கூடாது” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo