அனுமதியின்றி டிஜிட்டல் பேனர்: பிஜேபி 6 போ் மீது வழக்கு

கோவில்பட்டியில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைத்ததாக 6 போ் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் அரிக்கண்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது, இனாம் மணியாச்சி விலக்கு அருகேயுள்ள தேநீா்க் கடை எதிா்ப்புறம், அரசின் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தனவாம். இதுதொடா்பாக பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் வெங்கடேசன் சென்னகேசவன் உள்ளிட்ட 6 போ் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Tags :