1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு.

by Staff / 21-08-2024 01:10:10pm
1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று (ஆக.21) நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 28 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஏற்கனவே 19 திட்டங்கள் முடிவுற்ற நிலையில், மொத்தம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 83 பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தமிழ்நாட்டில் பொருளாதாரம் ஒரு ட்ரில்லியன் டாலர் நோக்கி செல்லும் என தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via