ஜப்பான் பிரதமருக்கு அமெரிக்க அதிபர் பாராட்டு..!!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை திறம்பட நடத்தி முடித்ததற்காக ஜப்பான் பிரதமர் யோஷிஹிட் சுகாவுக்கு அமெரிக்கா அதிபர் ஜோபைடன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் நெருக்கடிக்கு மத்தியில் ஜப்பானின் டோக்கியோ நகரில் 2020 ஒலிம்பிக் போட்டிகள் கடந்த மாதம் முதல் தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.
ஜப்பானில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற குழப்பங்களுக்கு மத்தியில் போட்டிகளை திறம்பட நடத்தி முடித்துள்ளனர்.
இதனை முன்னிட்டு ஜப்பான் பிரதமர் யோஷிஹிட் சுகா-வை தொலைபேசியில் அழைத்து பேசிய அமெரிக்கா அதிபர் ஜோபைடன் ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியதற்காக பாராட்டு தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மேலும் போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களின் செயல்திறனையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.
Tags :













.jpg)





