மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதையை திறந்துவைத்த உதயநிதி ஸ்டாலின்

by Editor / 27-11-2022 08:50:48pm
மாற்றுத் திறனாளிகளுக்கான  நடைபாதையை திறந்துவைத்த உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையை எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் இந்த நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரப்பாதையில் சென்று மாற்றுத்திறனாளிகளும் கடலின் அழகை ரசித்திட இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

Tags :

Share via