அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவசர ஆலோசனை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையின் சிச்சுவேஷன் ரூமில்தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் 2 மணி நேரத்திற்கும் மேலாக அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார்.
இந்த தற்காலிக ஒப்பந்தத்திற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் இன்னும் தங்களது இறுதி ஒப்புதலை வழங்கவில்லை.
-அரசு ஊடகங்கள் ஒப்பந்த வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும்மேற்கத்திய ஊடகங்களின் செய்திகள் முன்கூட்டியே வெளியிடப்பட்டவை என்றும் குறிப்பிட்டுள்ளன.
.ஹோர்முஸ் நீரிணையை ஈரான் சர்வதேச கப்பல் போக்குவரத்திற்காக நிபந்தனையின்றி மீண்டும் திறக்க வேண்டும்..
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கக் கூடாது.தங்களிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்ற அல்லது அழிக்க சம்மதிக்க வேண்டும்..
பொருளாதாரத் தடைகள்ஒப்பந்தம் கையெழுத்தானால், அமெரிக்கா ஈரான் மீதான கடற்படை முற்றுகையை நீக்கி, எண்ணெய் விற்பனைக்கான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தும்.
60 நாள் அவகாசத்தில், இஸ்ரேல் - ஹெஸ்பொல்லா இடையிலான மோதல்களையும் நிறுத்துவது குறித்து விவாதிக்கப்படும்.தற்போது இரு நாடுகளுக்கும் இடையே வார்த்தை திருத்தங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் மறைமுகமாக நடந்து வருவதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் தெரிவித்துள்ளார்.
. டிரம்ப் தனது கடுமையான நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் மட்டுமே இதில் கையெழுத்திடுவார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tags :


















