வைகாசி விசாகத் திருவிழா பால்குட ஊர்வலத்தின் போது கடுமையான வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக 87 பக்தர்கள் மயக்கம் அடைந்தனர்.
திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா பால்குட ஊர்வலத்தின் போது கடுமையான வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக 87 பக்தர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்களை கோவில் வளாகத்தில் உள்ள தேவ சேனா மண்டபம் மருத்துவ முகாமில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமீப நாட்களில் தமிழகமெங்கும் 105 டிகிரிக்கு மேல் வெப்பம் நிலவுவதின் காரணமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய திருத்தலங்களுக்கு செல்லக்கூடியவர்கள் ஓ ஆர் எஸ் கரைசல் எலுமிச்சை சாறு மோர் அல்லது குடிநீர் போன்றவற்றை அதிகம் பருக வேண்டும் என்றும் கையோடு தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் இது போன்று கூட்ட நெரிசல் உள்ள தினங்களில் முதியவர்கள் குழந்தைகள் பாதுகாப்பான முறையில் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் நலன் கருதி சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கோவில் நிர்வாகம் காவல்துறை சரியான பாதுகாப்பை வழங்கி உள்ள சூழலில், இயற்கையான வெப்பத்தின் காரணமாக தவிர்க்க முடியாத மயக்கம் தலை சுற்றல் போன்ற சூழல் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதால் அதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் தங்கள் தரிசன நேரத்தை வகுத்து அதன்படி செயல்படுவது நன்று
Tags :


















