சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த மூன்று பேரின் ராஜினமாவை ஏற்கக் கூடாது -அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி
அதிமுக சார்பாக கட்சி கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி. டி பிரபாகரை சந்தித்து நேற்று சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த மூன்று பேரின் ராஜினமாவை ஏற்கக் கூடாது என்று கடிதம் வழங்கி உள்ளனர். அதை ஏற்றுக் கொண்ட சட்டப்பேரவைத் தலைவர் சட்ட விதிக்குட்பட்டு செய்வேனென்றாா். தங்கள் கோாிக்கை பரிசீலனை செய்யவில்லையெனில் சட்டபூர்வ நடவடிக்கை நடவடிக்கைகளை தங்களுடைய கட்சி எடுக்கும் என்று தெரிவித்தார்.இதனையடுத்து அம்பை சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா எம். எல். ஏ. பதவியை ராஜினாமா செய்ததுடன் தவெகவில் இணைந்தாா்.
Tags :


















