தேசிய மாநாடு கட்சியும் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து கூட்டணி ஆட்சி. உமர் அப்துல்லா முதலமைச்சராக பதவி ஏற்பார்.

by Admin / 09-10-2024 12:25:53am
 தேசிய மாநாடு கட்சியும் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து கூட்டணி ஆட்சி. உமர் அப்துல்லா முதலமைச்சராக பதவி ஏற்பார்.

 ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேசிய மாநாடு கட்சி 42 இடங்களையும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆறு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால், தேசிய மாநாடு கட்சியும் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. தேசிய மாநாடு கட்சி தலைவர்  பரூக்அப்துல்லா மகன் உமர் அப்துல்லா முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..

 

Tags :

Share via