மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் பொறுப்பேற்பு

மதுரை ரயில்வே கோட்டத்தின் புதிய கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராக டி. ரமேஷ் பாபு பொறுப்பேற்றார். இவர் ஒரு மின்னணு பொறியாளர். 1996 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே சமிக்ஞை) மற்றும் தொலைதொடர்பு பிரிவை சேர்ந்தவர். ரயில்வே சமிக்ஞை மற்றும் தொலைதொடர்பு பிரிவில் கடந்த 23 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
ரயில்வே மின்மயமாக்கல் மத்திய அமைப்பில் இணை முதன்மைப் பொறியாளர் ஆகவும் இந்திய ரயில்டெல் கார்ப்பரேஷன் என்ற பொதுத்துறை நிறுவனத்தில் பொது மேலாளராகவும் பணியாற்றி உள்ளார். ரயில்டெல் நிறுவனத்தில் பணியாற்றியபோது மிக முக்கியமான பணியான 'இ- ஆபீஸ்' என்ற காகிதமில்லா அலுவலகப் பணியை இந்திய ரயில்வே முழுவதும் திறம்பட செயல்படுத்தியவர்.
இதுவரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராக பணியாற்றிய லலித்குமார் மன்சுகானி தென் மத்திய ரயில்வேக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Tags :