கொலை வழக்கில் தொடர்புடைய 17வது சிறுவன் தப்பி ஓட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மேல பாண்டிபுரம் ரயில்வே கேட் பகுதியில் அழுகிய நிலையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக மணியாச்சி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையெடுத்து போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறு ஆய்வில் தலை 16 வெட்டு காயங்கள் இருப்பதால் , அந்த அடையாளம் தெரியாத நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்தது. இதையடுத்து மணியாச்சி போலீசார் கொலை வழக்காக பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் கடந்த 20.08.24 அன்று பாறைக்குட்டம் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட வீரமணி என்பவரை தலையில் மர்மநபர்கள் சிலர் அரிவாளால் வெட்டி காயத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். காயம் அடைந்த வீரமணி பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கி அனுமதிக்கப்பட்டார். இது குறித்தும் மணியாச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் இரண்டு சம்பவங்களிலும் அரிவாள் வெட்டு ஒரே மாதிரி இருந்ததால் ஒரே கும்பல் தான் இதை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பாறைக்குட்டம் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் கேசவன் (22)என்பவருக்கு தொடர்பு இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் கேசவனை தட்டித்தூக்கி விசாரித்தனர்.
விசாரணையில் இரண்டு சம்பவங்களையும் செய்ததை கேசவன் ஒத்துக் கொண்டார்.. மேலும் இந்த இரண்டு சம்பவங்களிலும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தனக்கு உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவித்தார்.இதனை தொடர்ந்து கேசவனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டகேசவன் மீது தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கேசவனுக்கு உதவி செய்த 17 வயது சிறுவனை மணியாச்சி போலீசார் பாறைக்குட்டம் கிராமத்தில் உள்ள வீட்டில் கைது செய்தனர்.தொடர்ந்து சிறுவனை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக மணியாச்சி போலீசார் தூத்துக்குடிக்கு காரில் அழைத்து சென்ற போது பாறைக்குட்டம் பஸ்நிலையம் பகுதியில் வைத்து சிறுவன் தாயார் காரில் இருந்து இறங்கிய போது போலீசாரை தள்ளிவிட்டு சிறுவன் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தப்பி ஓடிய சிறுவனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags : கொலை வழக்கில் தொடர்புடைய 17வது சிறுவன் தப்பி ஓட்டம்.