சைதை துரைசாமி தனியார் மருத்துவமனையில் அனுமதி.

by Editor / 28-05-2024 10:18:18am
 சைதை துரைசாமி தனியார் மருத்துவமனையில் அனுமதி.


சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், அதிமுக மூத்த தலைவருமான சைதை துரைசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த பிப்ரவரியில் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, இமாச்சலப்பிரதேசத்தின் லடாக் சென்றிருந்த போது, கார் விபத்தில் உயிரிழந்த சம்பத்திற்குபிறகு மிகவும் சோகத்தோடு காணப்பட்ட சைதை துரைசாமி  நிமோனியா காய்ச்சல் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் இன்று (மே 28) காலை சென்னையிலுள்ள பிரபலமான தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்என தகவல்கள் வெளியாகியுள்ளன.


 

 

Tags : சைதை துரைசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி

Share via