தேர்தலின் போது பெண் கொலை: அண்ணாமலை கண்டனம்

by Staff / 21-04-2024 04:01:43pm
தேர்தலின் போது பெண் கொலை: அண்ணாமலை கண்டனம்

தேர்தல் நாளில் பெண்ணொருவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவரின் அறிக்கையில், ”கடலூர் மாவட்டம் பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி வாக்குப்பதிவு நாளன்று, திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தங்கள் கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக, திமுகவினர் இதை செய்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

 

Tags :

Share via

More stories