ரயிலில் தூங்கிக் கொண்டிருந்த பெண் பயணியின் முகத்தில்
ரயிலில் தூங்கிக் கொண்டிருந்த பெண் பயணியின் முகத்திற்கு முன் சுய இன்பம் செய்ததாக 47 வயது நபர் கைது செய்யப்பட்ட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சம்பத்தன்று காலை 7.30 மணியளவில் கர்நாடகாவில் உள்ள கோகர்ணா ரயில் நிலையம் அருகே நடந்தது. அந்தப் பெண் கேரளா மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர்.அந்தப் பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட நபர் அவர் அருகில் வந்து அவரது முகத்திற்கு முன் சுய இன்பம் செய்துள்ளார். இதனை அந்த பெண்ணுடன் பயணித்த நண்பர்கள் தடுத்து போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கேரளாவின் கண்ணூரில் பணிபுரியும் மகாராஷ்டிராவின் சாங்லியைச் சேர்ந்த தத்தாத்ரே சவான் என்பவர் என கூறப்பட்டுள்ளது.
Tags : ரயிலில் தூங்கிக் கொண்டிருந்த பெண் பயணியின் முகத்தில்



















