உதகையின் ஒரு சில இடங்களில் தற்போது மிதமான மழை...
உதகையில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு சில பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய துவங்கி உள்ளது...
அரசு தாவரவியல் பூங்காவில் குடைகளை பிடித்தவாறு சுற்றுலாப் பயணிகள் பூங்காவை கண்டு ரசிப்பு...
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து மேகமூட்டத்துடன் கூடிய இதமான காலநிலை நிலவி வந்தது.
இதனைத் தொடர்ந்து உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
மழையின் காரணமாக கிராமப்புற பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள கேரட், பூண்டு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலை காய்கறிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
மழையின் காரணமாக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வருகை தந்திருந்த சுற்றுலா பயணிகள் குடைகளை பிடித்தவாறு பூங்காவை ரசித்தனர். கடும் குளிருடன் கூடிய இதமான காலநிலை நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags :