பழனியில் தைப்பூச திருவிழாவிற்கு அன்னதானம் வழங்க 110 பேருக்கு அனுமதி.
திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு தன்னார்வலர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்படுவதற்கு பல்வேறு விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.அன்னதானம் வழங்க விரும்புவோர் கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற பின்னரே வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது. அதன்படி கோவில் நிர்வாகத்தில் பலர் அன்னதான அனுமதி கேட்டு மனு அளித்திருந்தனர். இதனையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தி 110 பேருக்கு அன்னதானம் வழங்க அனுமதி அளித்துள்ளனர். இந்த உரிமத்தை அவர்கள் ஓராண்டுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags : பழனியில் தைப்பூச திருவிழாவிற்கு அன்னதானம் வழங்க 110 பேருக்கு அனுமதி