எடப்பாடி பழனிசாமி, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அழைப்பு-திருமா,சண்முகம் பதில்.

by Staff / 17-07-2025 09:00:12am
எடப்பாடி பழனிசாமி, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அழைப்பு-திருமா,சண்முகம்  பதில்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், “திமுக கூட்டணயில் குழப்பத்தை ஏற்படுத்தவே இபிஎஸ் அழைக்கிறார். இது அவராக பேசுவதுபோல் தெரியவில்லை. யாரோ சொல்லிக்கொடுத்து பேசுவதுபோல் தான் தெரிகிறது. பாஜக - அதிமுக கூட்டணியிலேயே நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார். அதனால் தான் புதிது புதிதாக கட்சிகளை இணைக்க முயற்சிக்கின்றனர்” என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட பதிவில், “போன வாரம் கம்யூனிஸ்ட்களையே காணோம் என்றார், இந்த வாரம் கூட்டணிக்கு அழைக்கிறார். ‘கம்யூனிஸ்டுகள் கூட்டணிக்கு வந்தால் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம்’ என இபிஎஸ் பேசியுள்ளார். கம்யூனிஸ்டுகளுக்கு அவர் விரிப்பது ரத்தின கம்பளம் அல்ல, வஞ்சக வலை என்பதை அறிந்தே வைத்துள்ளோம்”.எடப்பாடி பழனிச்சாமி காலையில் ஒரு பேச்சு அதற்கு நேர் மாறாக மாலையில் ஒரு பேச்சு பேசுவார் ” என்றார்.

 

Tags : Edappadi Palaniswami, VVIP, Communist parties call - Thiruma, Shanmugam respond.

Share via