மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தேக்கு மரம் வெட்டி கடத்தல்-2 பேர் கைது.-சிலர் தலைமறைவு. வனத்துறையினர் இரண்டு பேர் சஸ்பெண்ட்
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான குற்றாலம் வனச்சரக எல்கைக்குட்பட்ட புளியரை ரிசர்வ் பாரஸ்ட் பகுதியில் அமைந்துள்ள மோட்டை நீர்தேக்கம் பகுதியில் தனியார் தோட்டத்தை ஒட்டி உள்ள அரசு வனப்பகுதியில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தேக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்த தயாராக வைத்து உள்ளதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து வனத்துறை அலுவலர் சீதாராமன் தலைமையில் வனத்துறையினர் அங்கு திடீர் ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு வெட்டி கடத்துவதற்கு தயாராக இருந்த தேக்கு மரங்களை வனத்துறையினர் கைப்பற்றினர். மேலும் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தேக்கு மரங்களை வெட்டி கடத்த முயன்ற முகமது கனி, பொன்னுத்துரை ஆகிய இரண்டு நபர்களை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் தேக்குமர வெட்டி கடத்தலில் ஈடுபட்ட ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர். இந்த வன பகுதியில் விலை உயர்ந்த மரங்களை வெட்டி கடத்தலில் ஈடுபட்ட முக்கிய புள்ளிகள் ஈடுபட்டுள்ளதும் வனத்துறையினுடைய விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் வனத்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு கடத்தலுக்கு உடந்தையாக இருந்த நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் செங்கோட்டை வட்டார பகுதிகளில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தேக்குமர வெட்டி கடத்தியது தொடர்பாக புளியரை வனவர் செல்லத்துரை ,மற்றும் வனகாப்பாளர் சார்லஸ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவிட்டுள்ளார்.
Tags : மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தேக்கு மரம் வெட்டி கடத்தல்-2 பேர் கைது.-சிலர் தலைமறைவு. வனத்துறையினர் இரண்டு பேர் சஸ்பெண்ட்