அக்னி நட்சத்திரத்தை ஒட்டிஅண்ணாமலையாருக்கு தாராபிஷேகம்.

by Editor / 04-05-2025 10:16:50am
அக்னி நட்சத்திரத்தை ஒட்டிஅண்ணாமலையாருக்கு தாராபிஷேகம்.

அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ளதையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் உள்ள கருவறையில் அண்ணாமலையாரின் திருமேனியை குளிர்விக்கும் விதமாகவும், அக்னி தோஷ நிவர்த்தியாக சிவலிங்கத்தின் மேல் பகுதியில் தாரா பாத்திரம் வைக்கப்பட்டு அதில் பன்னீர், புனிதநீர், ஏலக்காய், கடுக்காய் பொடி, கிராம்பு,பச்சை கற்பூரம், நவதானியங்கள், வெட்டிவேர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் போடப்பட்டுள்ளது. மேலும் பாத்திரத்தின் அடிப்பகுதியில் ஒரு சிறு துளையிட்டு அதில் இருந்து புனித நீர் சிவலிங்கத்தின் மீது துளித்துளியாக விழும்படியும் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் திருக்கோவில் உள்ள சிவலிங்கத்திற்கும், கிரிவலப்பாதையில் உள்ள இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் என அஷ்டலிங்க திருக்கோவிலில் உள்ள லிங்கத்தின் மீதும் தாரா பாத்திரம் கட்டப்பட்டு தாராபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இன்று முதல் வருகிற 28-ஆம் தேதி வரை இந்த நிகழ்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : அக்னி நட்சத்திரத்தை ஒட்டிஅண்ணாமலையாருக்கு தாராபிஷேகம்.

Share via