ஹேமந்த் சோரன் தொடர்ந்த மனு தள்ளுபடி

by Staff / 03-05-2024 12:39:57pm
ஹேமந்த் சோரன் தொடர்ந்த மனு தள்ளுபடி

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தொடர்ந்த மனுவை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நில மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. சோரனுக்கு பலமுறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அப்போதைய முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் தனது அதிகாரத்தையும் பதவியையும் தவறாகப் பயன்படுத்தி ஆதாரங்களை அழிக்க முயன்றதாக அமலாக்கத்துறை வாதிட்டது.

 

Tags :

Share via