விஷச்சாராயம் அருந்தி 69 பேர் உயிரிழந்த விவகாரம்:சிபிஐ விசாரணை தொடக்கம்.

கள்ளக்குறிச்சியில் கடந்த 2024 ஜூன் 19-ல் விஷச்சாராயம் அருந்தியதில் 69 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சிபிஐ அதிகாரிகள் கருணாபுரம் மற்றும் சேஷசமுத்திரம் பகுதியில் முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 3 வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள், நச்சு கலந்த சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை சந்தித்துபாதிப்பு குறித்து கேட்டறிந்தனர்.
Tags : விஷச்சாராயம் அருந்தி 69 பேர் உயிரிழந்த விவகாரம்:சிபிஐ விசாரணை தொடக்கம்.