குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்.

by Editor / 30-06-2022 08:31:07am
  குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து ஜூலை 18-ஆம் தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.

ஆளும் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவும் பிற கட்சிகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அந்த வகையில், இன்று சென்னை வருகை தரும் யஷ்வந்த் சின்ஹா, மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயம் வருகிறார். அங்கு அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
அங்கேயே திமுக - காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள், எம்பிக்களிடமும் ஆதரவு கோருகிறார். 

 

Tags : Presidential candidate Yashwant Sinha meets Chief Minister M.K.Stalin.

Share via