அரை நூற்றாண்டுக்கும் மேலாக குளிக்காமல், தனிமையில் இருந்த அழுக்கு மனிதர் உயிரிழந்தார்

உலகின் அழுக்கு மனிதராக கருதப்பட்ட ஈரானைச் சேர்ந்த அமவு ஹாஜி என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மரணமடைந்தார். 94 வயதான அவர், அரை நூற்றாண்டுக்கும் மேலாக குளிக்காமல், தனிமையில் இருந்து வந்துள்ளார். இதனால் அவர் உலகின் அழுக்கு மனிதர் என்று அழைக்கப்பட்டார்.ஈரான் தெற்கு மாகாணமான ஃபார்ஸில் உள்ள தேஜ்கா கிராமத்தில் வசித்து வந்த ஹாஜி, உடல் நிலை சரியில்லாமல் போய்விடும் என்ற அச்சத்தால் பல ஆண்டுகளாக குளிக்காமல் இருந்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராமவாசிகள் சிலர் ஹாஜியை அழைத்துச் சென்று குளிக்க வைத்தனர். இந்நிலையில், ஹாஜி காலமானார்.
Tags :