போதை பொருட்களுடன் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது

by Staff / 28-12-2022 12:43:48pm
 போதை பொருட்களுடன் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய போதை பொருட்களை விற்பனை செய்வோர்கள் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுக்கரை காவல் ஆய்வாளர் வைரம் மற்றும் காவல்துறையினர் மதுக்கரை அருகே தனியார் கல்லூரியின் அருகே உள்ள பேக்கரியின் பின்புறம் சென்று சோதனை மேற்கொண்ட போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை விசாரணை செய்தனர். அந்நபர் கேரளா மாநிலத்தை சேர்ந்த சுகுமாரன் சாபு என்பவரது மகன் சபுராணி அரேனா நிகில் (23) என்பதும் அவர் போதை ஏற்றக்கூடிய உயர் ரக போதை பொருளான மெத்தபெட்டமைன்-ஐ விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. எனவே சபுராணி அரேனா நிகில்(23) கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 54 கிராம் எடையுள்ள மெத்தபெட்டமைன் மற்றும் 1. 500 கிலோ கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து, மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
 

 

Tags :

Share via

More stories