ஆப்கானிஸ்தான் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

by Admin / 03-11-2023 09:53:28pm
ஆப்கானிஸ்தான் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் லக்னோ ஏகனா விளையாட்டு நகர மைதானத்தில் மோதின.. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 46 புள்ளி 3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 179 ரன்களை எடுத்தது.. அடுத்து ஆட வந்த  ஆப்கானிஸ்தான் அணி முப்பத்தி ஒன்று புள்ளி மூன்று ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை தோல்வியடையச் செய்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தானை விட புள்ளி பட்டியலில் ஒரு படி முன்னேறி உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
 

Tags :

Share via