தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

by Editor / 03-11-2023 09:59:40pm
தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால்   திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் நீரின் வரத்து கூடவோ குறையவோ செய்யலாம் என்றும் முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் என்றும் கால்நடைகளையும் ஆற்றில் இறக்க வேண்டாம் என்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் கா. ப கார்த்திகேயன் அறிவுறுத்தல்.

தற்போது தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் அபாய சூழல் இல்லை என்றாலும் தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் ஆயிரம் கன அடி தண்ணீர் தற்போது சென்று கொண்டிருப்பதால் பொதுமக்கள் யாரும் ஆட்சியில் இறங்க வேண்டாம் என்றும் கவனமுடன் செயல்படவும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா. ப கார்த்திகேயன் அறிவுறுத்தல்.

 

Tags : திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் கா. ப கார்த்திகேயன்

Share via

More stories