பஞ்சாப் மாநிலத்திற்குள் நுழைய இந்த இரண்டில் ஒன்று கட்டாயம் தேவை

by Admin / 14-08-2021 04:35:35pm
பஞ்சாப் மாநிலத்திற்குள் நுழைய இந்த இரண்டில் ஒன்று கட்டாயம் தேவை

மாணவர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து பள்ளிகளில் கொரோனா பரிசோதனை தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

பஞ்சாப் மாநிலத்திற்குள் நுழைய இந்த இரண்டில் ஒன்று கட்டாயம் தேவை
பயணிகளுக்கு பரிசோதனை


பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. மாணவர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து பள்ளிகளில் கொரோனா பரிசோதனை தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இதேபோல் அரியானா, இமாச்சல பிரதேசத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர், கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது.  எனவே, அண்டை மாநிலங்களின் கொரோனா பாதிப்பு நிலவரங்களை பஞ்சாப் கண்காளித்து அதற்கேற்ப கட்டுப்பாடுகளை அறிவித்துவருகிறது.
 
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்

அவ்வகையில், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள், தடுப்பூசி முழுமையாக போட்டிருக்க வேண்டும் அல்லது கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வரவேண்டும். அவர்கள் மட்டுமே பஞ்சாப் மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்தார். குறிப்பாக இமாச்சல பிரதேசம், ஜம்முவில் இருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள் என கூறி உள்ளார்.

முழுமையாக தடுப்பூசி போட்ட அல்லது கொரோனாவில் இருந்து சமீபத்தில் குணமடைந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் மட்டுமே பள்ளி, கல்லூரிகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
 

 

Tags :

Share via