சூரிய சக்தியில் இயங்கும் சுற்றுலா படகு
'சூரியம்ஷு' என்ற பெயரில் சூரிய சக்தியில் இயங்கும் முதல் சுற்றுலா படகை அறிமுகப்படுத்தியது, கேரளாவின் சுற்றுலாத் துறையை நோக்கி கொச்சி ஒரு பெரிய படியை எடுத்துள்ளது. ஒரே நேரத்தில் 100 பயணிகள் வரை பயணிக்கக் கூடிய இந்த படகானது தற்போது எர்ணாகுளம் கடல் பகுதியில் இயங்கத் தொடங்கியுள்ளது. டபுள் டெக்கர் படகில் கான்ஃபரன்ஸ் ஹால், டிஜே பார்ட்டி ஃப்ளோர் மற்றும் சிற்றுண்டிச்சாலை மற்றும் பயணிகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. கேரளா ஷிப்பிங் அண்ட் இன்லெண்ட் நெவிகேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் 3.95 கோடி ரூபாய் செலவில் சூர்யம்ஷூவை தயாரித்துள்ளது.
Tags :