தென்காசி பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு ஆபாச தகவல் அனுப்பிய பொள்ளாச்சி நபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் தென்காசி பகுதியைச் சார்ந்த பெண் ஒருவருக்கு ஆபாசமான வார்த்தைகளையும் தவறான செயலுக்கு அழைக்கவும் என அவருடைய கைபேசி நம்பரையும் முகநூலில் பதிவு செய்ததாக அந்த பெண் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை சார்ந்த ஜனகர் என்பவர் மீது தென்காசி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தன்ராஜ் கணேஷ் தலைமையில் காவல்துறை ஆய்வாளர் ஜோஸ்லின் அருள்செல்வி, உதவி ஆய்வாளர் செண்பகப்பிரியா, சிறப்பு உதவி ஆய்வாளர் தனசேகரன், மற்றும் காவலர் குழுவினர் கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி சென்று ஏழாம் தேதி அன்று முகநூலில் தென்காசியை சார்ந்த பெண் குறித்து அவதூறுவாக தகவல் பரப்பியதால் ஜனகரை கைது செய்து தென்காசி சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். ஜனகர் தற்பொழுது சபரிமலைக்கு மாலை அணிவித்த நிலையில் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்
Tags : தென்காசி பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு ஆபாச தகவல் அனுப்பிய பொள்ளாச்சி நபர் கைது செய்யப்பட்டார்.