ஆம்ஸ்ட்ராங் வீட்டில் முதலமைச்சர் ஸ்டாலின்

by Staff / 09-07-2024 12:06:15pm
ஆம்ஸ்ட்ராங் வீட்டில் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை அயனாவரத்தில் உள்ள மறைந்த ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்குச் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். அங்கு, ஆம்ஸ்ட்ராங் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய முதலமைச்சர், ஆம்ஸ்ட்ராங் மனைவியிடம் ஆறுதல் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த சில தினங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via