தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.

by Editor / 04-10-2024 09:13:39pm
தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008ன் கீழ், அனைத்து பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இதற்கு https://www.tnesevai.tn.gov.in என்ற இணையத்தை அணுகலாம் எனவும் அக்.19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் அதற்குப் பின்னர் விண்ணப்பித்தால் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் தெரிவித்துள்ளது.

 

Tags : தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

Share via

More stories