குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏமாற்றமடைந்த சுற்றுலாப்பயணிகள்

by Editor / 19-05-2022 09:57:22pm
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏமாற்றமடைந்த சுற்றுலாப்பயணிகள்

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதன் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது இதன் காரணமாக ஏற்கனவே அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் குற்றாலத்தில் சீசன் காலம் ஆகும் இதன் தொடர்ச்சியாக  குற்றாலத்தில் சீசன் முன்னதாகவே  தொடங்கி விட்டதாக கருதப்படுகிறது. மேலும் குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது மேலும் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டத் தொடங்கியது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக பயணிகளை அப்புறப்படுத்தினர், இதன்  தொடர்ச்சியாக குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்து பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதேபோன்று ஐந்தருவியில் சுற்றுலாப்பயணிகள்  குளிக்கதடை விதிக்கப்பட்ட நிலையில் இரவில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலாப்பயணிகள்  ஐந்தருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏமாற்றமடைந்த சுற்றுலாப்பயணிகள்
 

Tags :

Share via