தாயின் கழுத்தை அறுத்து கொன்ற மகன்

கேரள மாநிலம் பாலப்புரத்தை சேர்ந்தவர் சரஸ்வதியம்மா. இவருக்கு இரண்டு மகன்கள். அதில் இவரின் மூத்த மகன் விஜயகிருஷ்ணன். சரஸ்வதியம்மா தனது மூத்த மகனுடன் வீட்டில் ஒன்றாக வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக விஜயகிருஷ்ணன் மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
திடீரென ஒருநாள் சரஸ்வதியம்மாவின் இளைய மகன் வீட்டிற்கு வந்தபோது, தாய் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாகவும், விஜயகிருஷ்ணன் தூக்கில் தொங்கிய நிலையிலும் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவலின் பேரில் அங்கு விரைந்த காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :