மனைவியைக் கொன்று கணவா் தற்கொலை

by Staff / 07-11-2023 12:26:11pm
 மனைவியைக் கொன்று கணவா் தற்கொலை

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்துள்ள ஈஸ்வரமூா்த்திபாளையம் பகுதியை சோ்ந்தவா் செல்வராஜ்(49). லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி ராஜாமணி(45) இவா்களுக்கு திருமணமாகி காா்த்திகா என்ற மகளும், காா்த்திக் என்ற மகனும் உள்ளனா். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜாமணி அண்ணனான தேவேந்திரனின் மகள் மகேஸ்வரிக்கும் காா்த்திக்கிற்கும் திருமணம் நடந்துள்ளது. அப்போதிலிருந்து ராஜாமணி - செல்வராஜ் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ‘உன்னுடைய அண்ணன் மகளுக்கு ஏன் என் மகனை திருமணம் செய்து வைத்தாய்? ’ என்று செல்வராஜ் தினந்தோறும் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை மது அருந்தி விட்டு வந்த செல்வராஜ் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே மனைவியின் சேலையைக் கொண்டு கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு செல்வராஜ் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டாா். பின்னா் அக்கம் பக்கத்தினா் மங்களபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினா் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவம் தொடா்பாக மங்களபுரம் காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

 

Tags :

Share via
Logo