சிறுமி பாலியல் வன்கொடுமை - இளைஞருக்கு போக்சோ வழக்கில் 25 ஆண்டுகள் சிறை தண்டனை .
திண்டுக்கல் மாவட்டம் , பாலசமுத்திரத்தை சேர்ந்த தங்கபாண்டி (28), இவர் பக்கத்து தெருவில் வசிக்கும் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி..... திருமணம் செய்து, பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக ,பழனி காவல்நிலையத்தில் கடத்தல் மற்றும் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், வழக்கானது திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தங்கபாண்டிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 5, 000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. போக்சோ வழக்கில் 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :