தமிழரின் கையில் வானம் வசப்படும்.

by Admin / 22-11-2024 10:40:44am
தமிழரின் கையில் வானம் வசப்படும்.

வானம் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் 950 கோடி முதலீட்டில் விண்வெளி ஆய்வு மையத்தை முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பிராஜன் தலைமையில் தமிழக அரசு முயற்சியில் சபரீசன் வேதமூர்த்தி ,ஹரிஹரன் வேதமூர்த்தி, சமீர் ஆகியோரின் பங்களிப்போடு உருவாகிறது. கலிபோர்னியாவில் எலான் மஸ்க் நடத்தி வரும் ஸ்பேஸ்எக்ஸ்தனியார் விண்வெளி ஆய்வு மையத்தை போன்று தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்களுக்கும் புதிய முயற்சியில் தூண்டுகோலாக 2000 ஏக்கரில் ஸ்பேஸ் இண்டஸ்ட்ரியல் அண்ட் ப்ரோப் பல்லன்ட்ஸ் விண்வெளி தொழில்நுட்ப நிலையம் உருவாகிறது. ராக்கெட் தொழில்நுட்பத்தில் இந்தியாவில் தமிழகத்தில் தான் முதல் முதலாக விண்வெளி தொழில்நுட்ப முடிக் கி தொடங்கப்படும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் பங்களிப்போடு தமிழக தொழில் துறை அமைச்சர் துணையோடும் இம்முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இத்தகைய முன்னெடுப்புக்களால் தமிழக இளைஞர்கள் விண்வெளியில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு இருக்கிறவர்கள் வெளிநாடுகளை நோக்கி போகாமல் தமிழகத்திற்கு உள்ளே தன் கனவுகளை நிறைவேற்ற முடியும். இம்முயற்சி இந்தியாவை மற்றும் அன்று உலகத்தையே தமிழகத்தின் பக்கம் பார்வையை திருப்பி உள்ளது.

தமிழரின் கையில் வானம் வசப்படும்.
 

Tags :

Share via