நூதனமாகபணஆசைகாட்டி பள்ளிமாணவர்களை குறிவைக்கும் கும்பல்.

தமிழகத்தில் நடந்து முடிந்த 10 ஆம் வகுப்பு,12ஆம் வகுப்பு பள்ளி மாணவ , மாணவிகள் பெற்றோரின் தொலைபேசி எண்ணை இந்த நம்பரில் +919953928401 உள்ள ஒரு ஆண் நான் மாநில கல்வி துறை டிபார்ட்மெண்டில் இருந்து பேசுவதாகவும் +919953928401 உங்களின் மகள், மகள் குழந்தைகளின் பெயரைச் சொல்லி உங்களது மகன் மற்றும் உங்களது மகளுக்கு ரூபாய் 28400, 28500 ரூபாய் ஸ்காலர்ஷிப் வந்திருப்பதாகவும் அதை உடனடியாக உங்களது அக்கவுண்டில் மாற்றிக்கொள்ள உங்களது அக்கவுண்டில் உள்ள GPay நம்பர் கொடுக்கவும் என கட்டாயப்படுத்தி வேண்டாம் என்ற போது தொடர்ந்து கட்டாயப்படுத்தி குழந்தைகளின் பெற்றோரிர் அக்கவுண்டில் உள்ள Gpay நம்பருக்கு QR Code கோடு அனுப்பியும், Gpay இல்லாதவர்களுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களின் Gpay நம்பர் கேட்டு அவர்களது அக்கவுண்டில் உள்ள முழு தொகையையும் Scanar மூலமும் OTP மூலமாகவும் அக்கவுண்டில் உள்ள மொத்த பணத்தையும் எடுத்துக் கொள்கிறார்கள், தொடர்ந்து கிராமத்தில் உள்ள நபர்களை குறி வைத்து தொடர்ந்து மாநில கல்வித்துறையின் பெயரை சொல்லி தொடர்ந்து மோசடி செய்து வருகின்றனர். இன்று 18.05.2024 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் 1-வது மயில் அருகில் ஹோட்டல் நடத்தி வரும் உச்சிபொத்தை கிராமத்தை சேர்ந்த நடுத்தெரு பழனிவேல் மகன் திருமலக்குமார் 48/24 என்பவரின் மகள் லெட்சுமி வெள்ளாளங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்துள்ள தாகவும் அவருக்கு மாநில கல்வித்துறை டிபார்ட்மெண்டில் இருந்து ஸ்காலர்ஷிப் பணம் 28,500 வந்திருப்பதாக கூறி அவரது Gpay - QR Code - அனுப்பி அவருக்கு சொந்தமான வங்கி கணக்கில் இருந்து சுமார் 6000 எடுத்துக்கொண்டனர், இதனால் மிகுந்த மனவேதனையில் என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் கஷ்டத்தில் உள்ளார், அவரது ஒரே எண்ணம் இன்று நான் ஏமார்ந்து விட்டேன் என்றும் இவரது கஷ்டத்தை மற்றவர்களிடம் பகிர்ந்தால் அவர் உங்களை போல் எனது வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 40,000 எடுத்துவிட்டார்கள் என மனவேதனையில் கூறியதாக தெரிவித்துள்ளார் எனவே என்னை போல் கஷ்டப்படும் மாணவ & மாணவிகளின் பெற்றோர் ஏமாந்து விடக்கூடாது என்றும் ஒரு தகவலை தெரிவித்துள்ளார், தொடர்ந்து பள்ளி மாணவ & மாணவியர் குறி வைத்து மாநில கல்வித்துறை கூப்பிடுவாக கூறி ஒவ்வொரு ஏழை எளிய குழந்தைகளின் பெற்றோர்களின் வங்கி கணக்கிலிருந்து பணம் திருடி வருகிறார்கள், இது போன்ற செயல் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன், விழிப்புணர்வுடன் இருக்குமாறு வேண்டும் பொதுமக்கள்.+919953928401 இந்த நம்பரில் இருந்து போன் வந்தால் எடுக்க வேண்டாம்.
Tags : நூதனமாகபணஆசைகாட்டி பள்ளிமாணவர்களை குறிவைக்கும் கும்பல்.