தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 352 உயர்வு
சென்னைல் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 வரை, கிடுகிடுவென உயர்ந்து ரூ.35,968 க்கு விற்பனையாகிறது.கடந்த மாத தொடக்கத்தில் அதிரடியாக சரிந்த தங்கம் விலை அடுத்தடுத்த வாரங்களில் மீண்டும் ஏற்றத்தைக் கண்டது.நேற்று வரையில் தங்கம் விலை சின்னச் சின்ன ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்தது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.352 அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 அதிகரித்து ரூ.4,496 க்கு விற்பனையாகிறது.அதன் படி, சவரனுக்கு ரூ.352 அதிகரித்து ரூ.35,968க்கு விற்பனையாகிறது.மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 60 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.69.60 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.69,600 க்கும் விற்பனையாகிறது.
Tags :