மதுரை விமான நிலையத்தில் பிடிபட்டது 1 கிலோ 97 கிராம் தங்கம்.

by Staff / 13-10-2022 05:44:05pm
மதுரை விமான நிலையத்தில் பிடிபட்டது 1 கிலோ 97 கிராம் தங்கம்.

மதுரை விமான நிலையத்தில் துபாயிலிருந்து மதுரை வந்த விமானத்தில் 1 கிலோ 97 கிராம் எடையுள்ள ரூபாய் 56 லட்சத்து 40 ஆயிரத்து 774 மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது.நூதன முறையில் மின்விசிறியில் மறைத்து கொண்டுவந்ததை கைபற்றிய சுங்க இலாக நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றினர்.

துபாயிலிருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலை எடுத்து சுங்க இலக்க நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகத்திற்குரிய ஒரு நபர் டிராலி பேக்கில் மறைத்து வைக்கப்பட்ட மின்விசிறியில் 4 சிறிய காலி குழாய். வடிவிலானவற்றை மறைத்து வைத்து கொண்டு வந்ததை கண்டுபிடித்தனர்.இதில் ரூபாய் 56 லட்சத்து 40 ஆயிரத்து 777 மதிப்புள்ள சுமார் ஒரு கிலோ 97 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது

 

Tags :

Share via

More stories

Logo