இது முடிவல்ல; தொடக்கம் தான்” விஜய பிரபாகரன்.

by Editor / 05-06-2024 12:11:00am
இது முடிவல்ல; தொடக்கம் தான்” விஜய பிரபாகரன்.

மக்களவை தேர்தலில் நட்சத்திர தொகுதியாக மாறிய விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கும், அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கும் கடுமையான போட்டி நிலவிய நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் நீண்ட இளுபறிக்குப் பிறகு சுமார் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். தோல்விக்கு பின்னர் சமூகவலைதளங்களில் விஜய பிரபாகரன் வெளியிட்ட பதிவில், “வாக்களித்த அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றி..! இது முடிவல்ல; தொடக்கம் தான்” என தெரிவித்துள்ளார்.

 

Tags : விஜய பிரபாகரன்.

Share via

More stories