ஜீன்ஸ், லெகின்ஸ் அணிய தடை - அதிரடி அறிவுப்பு

by Staff / 08-11-2022 01:23:39pm
ஜீன்ஸ், லெகின்ஸ் அணிய தடை - அதிரடி அறிவுப்பு

தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், லெகின்ஸ் போன்ற உடைகளை அணியக்கூடாது என அசாம் மாநில முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், சட்டை மற்றும் பேண்ட் மட்டுமே ஆண்கள் அணிய வேண்டும். பெண்கள் புடவை மற்றும் சல்வார் கமீஸ் அணியலாம் என்றும் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் லெகின்ஸ் அணிய அனுமதி இல்லை என அறிவுறுத்தியுள்ளார். ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து ஊழியர்களும் பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும். தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் தினசரி ஊழியர்கள் மற்றும் நிரந்தர ஊழியர்கள் அனைவருக்கும் இந்த ஆடை கட்டுப்பாடு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via