by Staff /
26-06-2023
04:16:04pm
டெல்லியில் பட்டப்பகலில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய கும்பல் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சாந்தினிசவுக்கில் டெலிவரி ஏஜென்ட் பட்டேல் சஜன் குமார் என்பவர் வாடிக்கையாளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக குருகிராமிற்கு காரில் சென்றார். இந்நிலையில், அவர் சென்ற காரை 2 மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வழிமறித்து துப்பாக்கி முனையில் மிரட்டி பணப்பையை கொள்ளையடித்து சென்றனர். டெல்லியில் பட்டப்பகலில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :
Share via