by Staff /
26-06-2023
04:11:47pm
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் மாட்டிறைச்சிக்கா கடத்தியதாகக் கூறி மும்பை குர்லாவைச் சேர்ந்த அஃபான் அன்சாரி (32) என்ற இளைஞர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். அஃபான் அன்சாரி மற்றும் அவரது உதவியாளர் நாசிக் ஷேக் ஆகியோர் காரில் இறைச்சியுடன் வந்து கொண்டிருந்தனர். அப்போது பசு பாதுகாவலர்கள் என கூறிக்கொண்டு இறைச்சி கடத்துவதாக கூறி அவர்களை தாக்கினர். தாக்குதலில் பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அஃபான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே இறந்தாக .மருத்துவமனையில் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
Tags :
Share via